நற்பிட்டிமுனை படுகொலை – 17.05.1985


Warning: Undefined variable $disp_artcl_icon_div in /home/api.tamileelamarchive.com/public_html/view_article_details.php on line 152


Warning: Undefined variable $disp_pdf_link in /home/api.tamileelamarchive.com/public_html/view_article_details.php on line 179

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகரிலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் அமைந்துள்ள நற்பிட்டிமுனைக் கிராமம் கல்முனைப் பிரதேச செயலாளர் பிரிவினிலுள்ள கிராமங்களில் ஒன்றாகும். சேனைக்குடியிருப்பு, துறைநீலாவணை, மல்வத்தை, வீரமுனை போன்ற கிராமங்கள் நற்பிட்டிமுனையைச் சூழ்ந்து அமைந்துள்ளன. இங்கு வாழும் மக்கள் விவசாயத்தினையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளார்கள். கிராமத்தின் தென்புறம் சிறிய ஆற்றினைக் கொண்ட ஓர் அழகான கிராமமாகும்.

10.09.1990 அன்று காலை கல்முனையில் நிலைகொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் நற்பிட்டிமுனைக் கிராமத்தினைச் சுற்றிவளைக்கும் நோக்குடன் வரும்போது வீதியாற் சென்ற இளைஞர்களைக் கைது செய்துகொண்டு நற்பிட்டிமுனைக் கிராமத்தினைச் சுற்றிவளைத்தார்கள். சற்றிவளைத்த இராணுவத்தினர் நற்பிட்டிமுனைக் கிராமத்திலிருந்த வீடுகளின் கதவுகளை உடைத்துச் சென்று மேலும் இளைஞர்களை கைது செய்து கல்முனை சிறிலங்கா அதிரடிப்படை முகாமிற்குக் கொண்டு சென்றனர். கொண்டு செல்லப்பட்ட இருபத்துமூன்று இளைஞர்களும் கடும் சித்திரவதைகளினால் உயிரிழந்தார்கள். 12.09.1990 அன்று சித்திரவதையினால் உயிரிழநத் அனைவரது உடல்களையும் தம்பிலுவில் கிராமத்தில் ஒரே குழியினுள் போட்டுப் புதைத்தார்கள்.

17.05.1985 அன்று நற்பிட்டிமுனைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. இளையதம்பி செல்வராசா (வயது 30)
  2. கனகசூரியர் கோபாலசிங்கம் (வயது 28)
  3. கனகரத்தினம் தங்கவேல் (வயது 19)
  4. கந்தப்போடி புஸ்பராசா (வயது 23)
  5. காசிப்பிள்ளை சிவகுமார் (வயது 31)
  6. குழந்தைவேல் பொன்னுத்துரை (வயது 26)
  7. குலசேகரம் செல்வநாயகம் (வயது 26)
  8. கணபதிப்பிள்ளை நேசதுரை (வயது 22)
  9. குணரத்தினம் முரளிதரன் (வயது 21)
  10. குணரத்தினம் சுதாகரன் (வயது 23)
  11. துரையப்பா நடேசன் (வயது 23)
  12. தம்பிமுத்து பாக்கியராசா (வயது 27)
  13. தம்பிராசா விவேகானந்தன் (வயது 22)
  14. மயில்வாகனம் பரமேஸ்வரன் (வயது 27)
  15. ஆறுமுகம் நடேசன் (வயது 29)
  16. வெள்ளைப்பொடி தவராசா (வயது 23)
  17. ஞானப்பிரகாசம் யூவானில் (வயது 22)
  18. சதாசிவம் தங்கத்துரை (வயது 23)
  19. சிவநாதப்பிள்ளை தங்கத்துரை (வயது 23)
  20. வீரக்குட்டி தங்கவேல் (வயது 27)
  21. வரதராசன் வரதீஸ்வரன் (வயது 20)
  22. ராசமாணிக்கம் தியாகராசா (வயது 23)
  23. ஏகாம்பரம் தமிழ்வாணன் (வயது 19)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.