திரியாய்த் தாக்குதல்கள் – 1985


Warning: Undefined variable $disp_artcl_icon_div in /home/api.tamileelamarchive.com/public_html/view_article_details.php on line 152


Warning: Undefined variable $disp_pdf_link in /home/api.tamileelamarchive.com/public_html/view_article_details.php on line 179

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் ஒரு பூர்வீக தமிழ்க் கிராமமாகும். இங்கு 1985.06.08 ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் தாழப்பறந்து கொண்டிருந்த உலங்குவானூர்தி, திரியாய் கிராமத்திற்குப் பரவலாக, தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டை நடாத்தியது. இதனால் மக்கள் செய்வதறியாது அங்குமிங்கும் ஓடினர். பின் சிறிது நேரத்தில் வந்த சிறிலங்கா இராணுவத்தினர்  தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு முன் மக்களைத் தப்பியோடுமாறு பணித்தனர். மக்கள் உயிருக்குப் பயந்து ஓடித்தப்பிய பின்னர் மொத்தமாக எழுநூறு வீடுகள் எரியூட்டப்பட்டன. இதில் திரியாயில் நாநூறு வீடுகளும் கள்ளம்பற்றைப் பகுதியில் முன்நூறு வீடுகளும் கொளுத்தப்பட்டன. இதில் விவசாய உபகரணம், நெல் மூடைகள் மற்றும் இதரப் பொருட்கள் என்பனவும் தீயிடப்பட்டன.

இந் நடவடிக்கையின் பின்னர் பலர் இடம்பெயர்ந்து திருமலை நகாப் குதியில் தஞ்சமடைந்ததுடன், சிலர் திரியாய் பாடசாலைக் கட்டடத்தில் தங்கியிருந்தனர். 1985.08.08 ஆம் திகதி பாடசாலைக்கு வந்த இராணுவத்தினர் அங்கு தங்கியிருந்த பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தியதில் பத்துப் பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில் இளைப்பாறிய திரியாய் கிராம அலுவலர் க.நாராயணப்பிள்ளை, திரியாய் ப.நோ.கூ.ச தலைவர் கே.துரைநாயகம், திரியாய் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் செயலாளர் கே.ஏகாம்பரம், திரியாய் உயர்தர பாடசாலை அதிபரான பி.மகாதேவா ஆகியோர் உயிரிழந்தனர். அத்துடன் 1985 ஆகஸ்ட் மாதம் பதின்நான்காம் திகதி பயணிகள் பேருந்தில் பயணம் செய்த ஆறு தமிழ் பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி இவ்விடத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.