வவுனியா பூந்தோட்டச்சந்திப் படுகொலை


Warning: Undefined variable $disp_artcl_icon_div in /home/api.tamileelamarchive.com/public_html/view_article_details.php on line 152


Warning: Undefined variable $disp_pdf_link in /home/api.tamileelamarchive.com/public_html/view_article_details.php on line 179

வவுனியா நகரிலிருந்து கிழக்கே மூன்று கி.மீ. தூரத்தில் பூந்தோட்டம் அமைந்துள்ளது. வயல்களாற் சூழப்பட்ட இக்கிராமத்தில் அதிகமானவர்கள் விவசாயிகளாவர்.10.08.1985 அன்று காலை 7மணியளவில் வழமைபோல் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். சந்தைக்குப் பொருட்கள் வாங்க மற்றும் விற்கச் செல்வோர், வைத்தியசாலைக்குச் செல்வோர், பாடசாலை செல்வோர் எனப் பூந்தோட்டம் வீதியால் அதிகளவான மக்கள் பயணம் செய்தனர். அந்த நேரம் அவ்வீதியால் வாகனத்தில் வந்த காவற்றுறையினர் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் பத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள்.