விசுவமடுப் படுகொலை 25.11.1998


Warning: Undefined variable $disp_artcl_icon_div in /home/api.tamileelamarchive.com/public_html/view_article_details.php on line 152


Warning: Undefined variable $disp_pdf_link in /home/api.tamileelamarchive.com/public_html/view_article_details.php on line 179

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் பரந்தன்-முல்லைத்தீவு பிரதான வீதியில் விசுவமடு அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் பிரதான பொருளாதாரம் விவசாயமாகும். இங்கு நெல், தென்னை போன்றவற்றுடன் மேட்டு நிலப்பயிர்களும் பயிரிடப்படுகின்றன. இவற்றிற்கான நீரினை விசுவமடுக்குளம் வழங்குகின்றது. இப்பிரதேசத்தின் சந்திப்பகுதி சிறிய நகரப் பண்பைக் கொண்டுள்ளது. 25.11.1998 அன்று பிற்பகல் 2மணியளவில் பாடசாலை விட்டு மாணவர்கள் வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் இராணுவத்தினரால் ஆனையிறவிலிருந்து விசுவமடுப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் பாடசாலையிலிருந்து வீட்டுக்குவந்து மதிய உணவு

சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவன் ஒருவன் அவ்விடத்திலேயே உயிரிழந்தான். மற்றைய எறிகணை விசுவமடு மகாவித்தியாலயத்திற்கு அருகில் வீழ்ந்து வெடித்ததில், தனது மாமனாருக்கு மதிய உணவினைக் கொண்டுவந்த சிறுவன் காயமடைந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தான். மேலும் இதனை அண்டிய பகுதிகளில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் இருவர் உயிரிழந்தார்கள். இச்சம்பவங்களில் மொத்தமாக ஆறிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன்;, பத்துப் பேர் காயமடைந்தனர்