நெல்லியடிப்படுகொலை 04 மே 2006


Warning: Undefined variable $disp_artcl_icon_div in /home/api.tamileelamarchive.com/public_html/view_article_details.php on line 152


Warning: Undefined variable $disp_pdf_link in /home/api.tamileelamarchive.com/public_html/view_article_details.php on line 179

இராணுவத்தினாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஏழு இளைஞர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவமானது 04-05-2006 அன்று பிற்பகல் 02.15 மணியளவில் யாழ் வடமராட்சி நெல்லியடிச்சந்திக்கு 300 மீற்றர் தொலைவில் நவின்டிலில் அமைந்துள்ள  சிறிலங்கா இராணுவத்தினரின் புலனாய்வுத்துறை முகாமிற்கு அண்மையாக இடம்பெற்றது. இவர்கள் சகநண்பர் ஒருவரின் விருந்து உபசாரத்தில் கலந்து கொள்வதற்காக முச்சக்கரவண்டிகளில் சென்றுகொண்டிருக்கும்போது இச்சம்பவம் இடம்பெற்றது. இச்சம்பவத்திற்கு சற்று முன்னதாக இப்பகுதி இராணுவமுகாம் மீது கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இதில் மூன்று இராணுவப் புலனாய்வாளர்கள் காயமடைந்தனர். அதன் பின்னரே இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது